Tuesday 7th of May 2024 01:44:49 AM GMT

LANGUAGE - TAMIL
நீல் பெர்குசன்
கட்டுப்பாட்டை மீறி காதலியைச் சந்தித்த  பிரிட்டன் விஞ்ஞானி பதவி விலகினாா்!

கட்டுப்பாட்டை மீறி காதலியைச் சந்தித்த பிரிட்டன் விஞ்ஞானி பதவி விலகினாா்!


பிரிட்டனில் சமூக முடக்கல்களை அமுல்படுத்துமாறு பிரதமா் போரிஸ் ஜோன்சனை அறிவுறுத்திய விஞ்ஞானி பேராசிரியர் நீல் பெர்குசன் கட்டுப்பாட்டை மீறி காதலியைச் சந்தித்தது ஊடகங்கள் ஊடாக அம்பலமானதால் செவ்வாய்க்கிழமை இரவு தனது அரசாங்க ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார்.

ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு கட்டுப்பாடுகளை மீறி் அவா் தனது காதலியைச் வீட்டுக்கு அழைத்துச் சந்தித்ததை த டெய்லி ரெலிகிராப் புகைப்படங்ளுடன் அம்பலப்பத்தியதால் எழுந்த சிக்கல்களை அடுத்து அவா் பதவி துறந்தாா்.

பிரிட்டனில் கடந்த மார்ச் 23முதல் ஊரடங்கு அமுலில் உள்ளது. உடற்பயிற்சிக்காகவும், அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியும் என்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோயியல் நிபுணரும், விஞ்ஞானியுமான நீல் பெர்குசன் (வயது 51) தலைமையிலான சாகே என்று அழைக்கப்படக்கூடிய அறிவியல் ஆலோசனை அவசர குழு அளித்த ஆலோசனையை ஏற்றுத்தான் பிரதமர் போரிஸ் ஜோன்சன் சமூக முடக்கலை அறிவித்தாா்.

இந்நிலையில் தொற்றுநோயியல் நிபுணரும், விஞ்ஞானியுமான நீல் பெர்குசன் சமூக முடக்கல் விதிமுறைகளை மீறி தனது காதலி அன்டோனியா ஸ்டாட்ஸ் என்பவரை இரண்டு முறை தனது வீட்டுக்கு அழைத்துள்ளாா்.

நீல் பெர்குசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 2 வாரங்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, அந்த கால கட்டம் முடிந்ததும் இந்தச் சந்திப்பு அரங்கேறி இருக்கிறது.

இந்த காதல் சந்திப்பை பிரிட்டனில் இருந்து வெளிவரும் த டெய்லி ரெலிகிராப் பத்திரிகை படம் பிடித்து பிரசுரித்தது.

இதனை அடுத்து எழுந்த சா்ச்சையால் விஞ்ஞானி நீல் பெர்குசன், அறிவியல் ஆலோசனை அவசர குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

நான் செய்த தவறை ஒப்புக்கொள்கிறேன். தவறை ஏற்று அறிவியல் ஆலோசனை அவசர குழுவில் இருந்து நான் பதவி விலகிவிட்டேன் என இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ள விஞ்ஞானி நீல் பெர்குசன் தெரிவித்துள்ளாா்.


Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE